செம்பருத்தி பூவின் அற்புத பயன்கள் 




செம்பருத்தி (hibiscus) எல்லோரும் அறிந்த ஒரு பூ. ஆனால் செம்பருத்தியின் பயன்கள் (sembaruthi benefits) பற்றி அறிந்தவர் சிலரே. செம்பருத்தி அல்லது செவ்வரத்தை என்று அழைக்கப்படும் இது இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் வளரும் ஒரு செடி இனம். செம்பருத்தி பூ அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது ; மற்றும் இதன் இலை, வேர், பூ என அனைத்தும் மருத்துவ தன்மை கொண்டவை. அதுமட்டும் அல்லாது அழகை மேம்படுத்தவும் இது  பயன்படுகிறது. இதனை பசுபிக் தீவுகளில் மக்கள் உணவாக உட்க்கொள்கின்றனர். 


சருமம் 

செம்பருத்தி பூ குளிர்ச்சி மற்றும் ஈரப்பதத்தை அளிக்க கூடியது. எனவே செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வர உடல் பளபளப்பாக மாறும். அத்துடன் இதன் பூக்கள்  உடல் சுருக்கங்களை குறைக்க கூடியது. 

தலைமுடி 

செம்பருத்தி இலைச் சாறு தலை வழுக்கையை நீக்கவும், தலைமுடியை கறுப்பாக்கவும் பயன்படுகிறது. எவ்வித பக்க விளைவுகளும் பாதிப்புக்களும் அற்ற இதனை இயற்கையின் கொடை எனலாம். 

செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

செம்பருத்தி பூவின் இதழ்களை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைமுடி நீளமாகவும் கருமையாகவும் வளரும். தலைமுடி உதிர்தலும் குறைந்து விடும். 


மருத்துவ பயன்கள் 


இதயம்

செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் நீங்கும்.


உயர்  ரத்த அழுத்தத்தை குறைக்கும் 


இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.


இருமலை குணப்படுத்தும் 


செம்பருத்தி பூ இலைகள் 15 மற்றும் ஆடாதோடை தளிர் இலைகள் 3, இரண்டையும் அரைத்து 1/2 டம்பளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி 1/2 தேக்கரண்டி தேன் சேர்த்து தினமும் காலை மலை என 3 நாட்களுக்கு குடித்து வர இருமல் குணமாகும். 


சிறுநீர் எரிச்சல் குணமாக்கும் 

ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் உண்டாகும். கோடை காலங்களில் நீர் சுருக்கு ஏற்படுவதாலும் சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் உண்டாகும். இவ்வாறு உள்ளவர்கள் செம்பருத்தி பூவின் இலைகள் அல்லது மொட்டுக்களை 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி கற்கண்டு சேர்த்து குடித்து வர சிறுநீர் எரிச்சல் குணமாகும். 


இரத்த சோகை நோயை குணமாக்கும் 


செம்பருத்தி பூ தூளுடன் மருதம்பட்டைத்  தூள் சம அளவு எடுத்து 1 தேக்கரண்டி காலை மாலை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இரும்பு சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குணமாகும். 




பெண்களுக்கு 




செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.

செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

பெண்கள் செம்பருத்தி பூ இதழ்களை உண்டு வந்தால் மாதவிடாய் பிரச்னை, மூட்டு வலி, இடுப்பு வலி போன்ற உடல் உபாதைகள் நீங்கும்.  நீங்கும்.

மாதவிடாய் சரியாய் வருவதற்கு இவ் இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு தூளை காலை மாலை என 7 நாட்களுக்கு உட்கொள்ளவேண்டும்.

வயது அதிகம் ஆகியும் கருப்பை பாதிப்பினால் கரு உருவாகாமல் இருக்கும் பெண்கள்  செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

By Vino