தலைமுடி என்பது எல்லோருக்கும் அத்தியாவசியமான ஒன்று. கூந்தலை அழகுபடுத்தவும் அதனை பராமரிக்கவும் எல்லோரும் அதிகளவு நேரம் செலவிடுவார்கள்.முடி கொட்டுவதை தடுக்க கடைகளில் விற்கப்படும் பல வகையான தைலம், ஷாம்பு, கண்டிஷனர் என்றெல்லாம் பயன்படுத்தி இருப்பம் ஆனால் எதுவும் பலனளித்திருக்காது.  இயற்கை முறையில் கூந்தலை பராமரிப்பதன் மூலம் அடர்த்தியான நீளமான கூந்தலை பெறமுடியும். அதில்  மிக முக்கியமான ஒன்று தான் ஹேர் பேக்  அப்ளை செய்வது. முடி உதிர்தலை தடுத்து முடி வளர்ச்சியினை அதிகரிக்கும் எளிய முறையில் வீட்டிலேயே செய்ய கூடிய ஹேர் பேக்  பற்றி பாப்போம். 




செம்பருத்தி பவுடர் ஹேர் பேக் 



செம்பருத்தியின் பயன்கள் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது சரும அழகிற்கு மட்டுமல்ல கூந்தலை பராமரிக்கவும், முடி உதிர்தலை தடுத்து அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கும் இதன் பங்கு ஏராளமே. 
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்தது. இது இளநரை பிரச்சனையை தடுக்க கூடியது. அதுமட்டும் அல்லாது கூந்தலில் ஏற்படும் வெடிப்புகளை சரி செய்யவும் இது மிகவும் உதவுகிறது. 
தயிர் இயற்கையான பிளீச்சிங் தன்மை கொண்டது. தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனையை தீர்க்க கூடியது. அத்துடன் இயற்கையான கண்டிஷனராக செயல்படக்கூடியது. 


தயாரிக்கும் முறை :

செம்பருத்தி பூவினை வெயிலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளவும். இந்த பவுடர் உடன் நெல்லிச்சாறு கலந்து அதனுடன் கட்டியான தயிர் சேர்த்து ஒரு பேக் போல கலந்து கொள்ளவும். இதனை கூந்தலின் ஸ்கேல்ப் பகுதியில் இருந்து முடி நுனி வரை தடவ வேண்டும். ஒரு 30 நிமிடங்களின் பின்னர் ஷாம்பு கொண்டு அலச வேண்டும் இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வருவதன் மூலம் அடர்த்தியான கூந்தலை பெற முடியும். 



Keyword : Hair pack in Tamil,  Hair pack with curd,  Hair pack for dry hair,  Hair pack for dandruff 




வெந்தயம் மற்றும் கற்றாழை ஹேர் பேக் 



முடி கொட்டும் பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிப்பதில் வெந்தயம் சிறப்பாகவே உதவுகிறது. முடி உதிர்வு முதல் வழுக்கை வரையான அனைத்து பிரச்சனைக்கும் வெந்தயம் பெரிதும்  உதவுகிறது.வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. கூந்தலை வேரிலிருந்து நுனி வரை உறுதியாக மாற்றும் அத்துடன் இளநரையையும் கட்டுப்படுத்தும். கற்றாழை கூந்தல் வளர்ச்சியை தூண்ட கூடியது. இது கூந்தலுக்கு மென்மையை குடுக்கும் பண்பு கொண்டது. கறிவேப்பிலை இரும்பு சத்து கொண்டது. இது சேதமடைந்த கூந்தலை சரி செய்து முடி உதிர்தலை குறைக்கும் குணம் கொண்டது. வெந்தயம் போன்று உளுந்தும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது. 


தயாரிக்கும் முறை :

வெந்தயம் மற்றும் உளுந்து சம அளவு எடுத்து கொள்ளவும். வெந்தயத்தை 2 மணி நேரம் ஊறவைத்து எடுக்கவும் அதனுடன் உளுந்தை தோல் நீக்கி எடுத்து இரண்டையும் அரைத்து கொள்ளவும். இதனுடன் தோல் நீக்கி சுத்தம் செய்த 2 கற்றாழை இலைகளையும், சிறிது கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும் மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து ஒரு பேக் போல் குழைத்து கொள்ளவும். வேர்க்கால் முதல் நுனி வரை தடவி 20 நிமிடங்களின் பின்னர் ஷாம்போ கொண்டு அலசி விடவும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்வதன் மூலம் அழகான நீளமான கூந்தலை பெற முடியும். 







முட்டை மற்றும் தேன் ஹேர் பேக் 



முட்டை வெள்ளை கருவில் அதிகளவு புரத சத்து உள்ளது. இது கூந்தல் வேர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்குவதோடு முடி உதிர்வதையும் தடுக்கிறது. தேன் முடிக்கு பயன்படுத்தினால் முடி வெள்ளையாகிவிடும் என்பது பலரது கருத்து. ஆனால் உண்மை அதுவல்ல. தேன் கூந்தலுக்கு தேவையான ஈரப்பத்தினை வழங்கி முடி வறண்டு போவதை தடுக்கிறது. கூந்தல் மென்மையாக இருக்க பெரிதும் உதவுகிறது. 


தயாரிக்கும் முறை : 

முட்டை வெள்ளை கருவுடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யவும். ஒரு 30 நிமிடங்களின் பின்னர் ஷாம்பு கொண்டு அலசி விடவும். மாதம் இரு முறை இவ்வாறு செய்வதன் மூலம் நீளமான அடர்த்தியான கூந்தலை பெற முடியும். 





குறிப்பு :

முதல் முறை ஹேர் பேக் பயன்படுத்தும் போது அதிக நேரம் ஊறவைக்க வேண்டாம். மாலை நேரங்களில் இதை பயன்படுத்துவத்தை தடுக்கவும். ஏனெனில் இது  குளிர்மை  தரக்கூடும் என்பதால் காலை வேளையில் மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். மாதம் ஒருமுறை அல்லது  இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்தகூடாது. காய்ச்சல், தடிமன் பிரச்னை உள்ள காலங்களில் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.