இன்றைய நவீன உலகில் சருமத்தை அழகாக்கவும், வெண்மையாக்கவும் பலதரப்பட்ட கிரீம் வகைகள் விற்பனையாகின்றன. ஆனால் அவை அனைத்தும் நிரந்தரமான தீர்வை தராது. நம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே நமது சருமத்தை அழகாகிக்க முடியும். இவ்வாறு நாம் பயன்படுத்த கூடிய ஒரு பொருளே ஓட்ஸ். 




ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடியது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே ; ஆனால் ஓட்ஸ் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகை மேம்படுத்தவும், சருமத்தை வெண்மையக்கவும் (ஸ்கின் வ்ஹிட்டெனிங்) மிகவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தை வறட்சியிலிருந்து நீக்கி இறந்த செல்களை நீக்குகிறது. ஓட்ஸ் பேஸ் பேக் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கி முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கிறது. இதிலுள்ள  செபோனின் இயற்கையான சுத்திகரிப்பானாக செயல்படுகிறது. இது சருமத்தில் உள்ள அழுக்குகள், எண் ணெய் பசைகள் போன்றவற்றை நீக்கி சருமத்தைப் பொலிவாக புதுப்பிக்கிறது




வெண்மையான சருமத்தைப் பெற...



2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸை சிறிது நீரில் வேக வைத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் 4 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு அரைத்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், உங்கள் ஸ்கின் வெண்மையாக (ஸ்கின் வ்ஹிட்டெனிங்) மாறுவதைக் காணலாம்.



வறட்சியான சருமத்திற்கு...

1 ஸ்பூன் தேன்; 1 ஸ்பூன் பால்; 1 ஸ்பூன் ஓட்ஸ் ஆகிய மூன்றையும்  ஒன்றாக கலந்து, புருவம் மற்றும் கண்கள் பகுதியில் படாமல் தடவுங்கள். 10 நிமிடம் அப்படியே வைத்து குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இப்படி வரம் ஒருமுறை செய்தால் வரண்ட சருமம் வழுவழுப்பாகும்.



எமது பேஸ்புக் பக்கத்தில் பார்வையிட கிளிக் பண்ணவும்                                    




முகத்தில் உள்ள சன்- ரான் நீங்க... 

2 அல்லது 3 பாதம் பருப்பை மைய்ய பொடி செய்து கொள்ளுங்கள் . இந்த பாதம் பேஸ்ட்டை இரண்டு ஸ்பூன் பாலில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் தட வேண்டும். பிறகு 15 – 20 நிமிடங்கள் வைத்து கழுவவும். இது முகத்தில் ஏற்பட்டிருக்கும் டேன் முற்றிலுமாக அகற்ற உதவும்.



சருமத்தை மென்மையாக்க.... 


2 ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 2 ஸ்பூன் கடலை மா எடுத்து கொள்ளுங்கள். இதனுடன் 1 ஸ்பூன் தேன், 1ஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து காய வைத்து குளிர் நீரை கொண்டு கழுவி பிறகு மாய்ஸ்சரைசர் தடவுங்கள். இது சருமத்தின் அழுக்கை அகற்றி சருமத்தை சுத்தமாகவும்,  மென்மையாகவும் வைக்க உதவும். 




கரும்புள்ளிகள் நீங்க...... 

2 ஸ்பூன் ஓட்ஸ், 1ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1ஸ்பூன் தயிர் எடுத்து கொள்ளுங்கள். இதனை நன்றாக குழைத்து , முகத்தில் கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் மட்டும்  வையுங்கள். 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப் பான நீரில் கழுவுங்கள். இவ்வாறு பயன்படுத்தும் போது அடைப்பட்ட சரும துளைகள் திறந்து சருமத்தைச் சுத்தம் செய்கிறது. இதனால் கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விடும். 








முகத்தில் உள்ள தழும்புகளைப் போக்க.... 

1/2 கப் ஓட்ஸை, 1 கப் பால் சேர்த்து நன்கு 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைத்து, பின் அதனை லேசாக மசித்து, முகத்தில் தடவி 30 நிமிடம் உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்களால் வந்த தழும்புகளானது மறைந்துவிடும்.



இளமையான தோற்றத்திற்கு.... 

தேங்காய் எண்ணெயில் ஓட்ஸ் கலந்து பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து கொள்ளவும். பேஸ்டை அப்ளை செய்வதற்கு முன் , முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவி அழுக்குகளை சுத்தம் செய்து கொள்ளவும். பின் ஓட்ஸ் பேஸ்டை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவிடவும். பேஸ்ட் இறுகியதும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் இளமையாக தோன்றும்.   


By Vino



இதையும் படிக்கலாம் 👇